Friday 21 June 2013

பரோட்டா சால்னா

சால்னாவை  சைவ சால்னா , அசைவ சால்னா என்று இரண்டு வகைகளில் இதை செய்யலாம் . ஹோட்டல் சால்னா என்றாலே அதற்கு தனி டேஸ்ட்தாங்க . இன்னைக்கு எங்க வீட்டில் செய்கிற முறையை உங்களுடன் ஷேர் பண்றேன், செய்து பார்த்திட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க. இதை நான் ஹோட்டல் ஒன்றில் கற்றுக்கொண்டேன் . நான் எந்த காய்கறிகளையும் சேர்க்காமல் செய்திருக்கிறேன் , நீங்கள் காளான் அல்லது  கோழி சேர்த்தும் இதை செய்யலாம்.



பாலக் தால் / Palak Dal

பாலக் தால் 
பாலக் / பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் 'ஏ', 'பி', 'சி ' ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன.பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.

இவ்வளவு நண்மைகள் கொண்ட பாலக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.பாலக் கீரைக்கொண்டு பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று தால் பாலக் செய்முறை காட்டி உள்ளேன்.பின் வரும் பதிவுகளில் பாலக் பனீர்,பாலக் சட்னி ,பாலக் பக்கோடா,பாலக்  ரைஸ்,போன்றவற்றின் செய்முறைகளை பதிவிடுகிறேன்.
சரி தேவையான பொருட்களை பார்ப்போம்...

Wednesday 19 June 2013

புதினா சாதம்/ MINT RICE

                      

 புதினா சாதம் எளிதா செய்யக்கூடிய கலவை சாத வகை. லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற உணவு.அதுமட்டும் இல்லாமல் புதினா உடல் ஆரோகியதிற்கும் நல்லது.
நான் இதை மிகவும் சுலபமான முறையில் செய்து காட்டியுள்ளேன். நீங்கள் மீதமான சாதத்தை கூட இதற்கு பயன்படுத்தலாம்.

Tuesday 18 June 2013

ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli

ஹசிலி ஃபுசிலி /Hasili  Fusilli 
"ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி" 
என்னடா இது சமைக்க வாங்கன்னு போர்ட் போட்டுக்கிட்டு உள்ள பாட்டு வரிகள் இருக்கேன்னு பார்க்குரிங்களா?
இந்த வரியைதான் என் மாண்புமிகு மணவாளன், டிஷ் செஞ்சு முடிகிறவரை பாடிக்கிடே இருந்தார். அதனாலேயே இந்த வெறும் ஃபுசிலி க்கு ஹசிலி ஃபுசிலி ன்னு பெயர் வச்சேன்.

Sunday 16 June 2013

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

Muniyandi Vilas Chicken Curry
முனியாண்டி விலாஸ் சிக்கன் கரி. ஆகா கேட்கும் போதே சுவை நினைவுக்கு வரும் இல்லங்களா!!! முனியாண்டி விலாஸ் நான் வெஜ் க்கு பெயர் போன ஹோட்டல். அதனாலேயே நிறைய நான் வெஜ் ஹோட்டல்கள் அந்த பெயரை வெய்பதுண்டு. இன்னைக்கு நான் ரொம்ப டேஸ்ட்டான ரொம்ப ஈசியான சிக்கன் கரி எப்படி செய்றதுன்னு சொல்றேன். செய்து சாப்பிட்டு பாருங்க,கண்டிப்பா ஹோட்டல்ல சாப்பிட்ட எண்ணம் தோன்றும். நிச்சயமா திரும்ப திம்ப செய்விங்க.
இப்போ தேவையான பொருட்களை பார்போம்.....

பரோட்டா

 ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா  வீட்டில் செய்ய முடியுமா ? அந்த டேஸ்ட் வருமா? என்று நாம் பலரும் நினைப்போம் . இன்னைக்கு  நான் கொஞ்சும் இதை உங்களுடன் பகிரலாம் என்று நினைகின்றேன்  . பரோட்டாவை வீட்டிலேயே  எப்படி மிருதுவாக செய்றதுன்னு இதில் காட்டியிருக்கிறேன் . நீங்களும் செய்துபாருங்கள்.



Saturday 15 June 2013

SURUL POORI / சுருள் பூரி

சுருள் பூரி ஒரு சுவையான , கரகரப்பான  இனிப்பு வகை ஆகும் . இதை  இரண்டு வகைகளில் சமைக்கலாம் . ஒன்று பொடித்த சர்க்கரை பொடியை துவி செய்வது , மற்றொன்று சர்க்கரை பாகில் ஊறவைத்து சுவைப்பது . இங்கு நான் இரண்டாவது முறையில் இதை செய்துள்ளேன் .இதில் நான் உணவு கலரை சேர்த்து ஒரு புதிய முறையில் செய்துள்ளேன் . நீங்களும் செய்து பாருங்கள் . உணவு கலரை சேர்க்காமலும் இதை தயார் செய்யலாம் .




Friday 14 June 2013

ரோடு சைட் மசாலா பூரி சாட் / Road Side Masala Poori Chaat

ஹாய்!!! வணக்கம்,
முதல்ல என்னோட ப்ளாகுக்கு முதல் முறையா வருகை தந்திருக்கவங்களுக்கும், திரும்ப விசிட் அடிச்சு இருக்கவங்களுக்கும் என்னோட infinitive நன்றிகள். ....

இன்னைக்கு நான் பானி  பூரி ஸ்டால்ல விக்கிற மசாலா பூரி எப்படி செய்றதுன்னு சொல்றேன்.முதல்ல தேவையான பொருட்களை பார்போம்.


Thursday 13 June 2013

ட்ரை கலர் டிபன் / Tricolor Tiffin


 ட்ரை கலர் டிபன்

ஹாய்!! என்னடா அது ட்ரை கலர் டிபன்னு யோசிச்சிங்களா....  ஆமாங்க மூணு கலர் இருக்க டிபன் ஐட்டம் தான் இது. பச்சை கலர் சிங்குச்சா, வெள்ளை கலர் சிங்குச்சா, சிவப்பு கலர் சிங்குச்சா....ஓக்கே ஓக்கே.... மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு  கிரீன் தோசை, வைட் சட்னி,ரெட் சட்னி மூனையும் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். சரி வாங்க  என்ன என்ன தேவைன்னு பார்க்கலாம்.

Wednesday 12 June 2013

குடைமிளகாய் புளி கறி / Capsicum Tamarind Curry

குடைமிளகாய் புளி கறி 

இது ஒரு ட்ரை க்ரேவி ரெசிபி. வைட் ரைஸ், தயிர் சாதம், சப்பாத்தி,இட்லி,தோசை,எல்லாத்துக்குமே ரொம்ப நல்ல காம்பினேசன். செய்யறதும் ரொம்ப ஈஸி.சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.