Friday, 21 June 2013

பாலக் தால் / Palak Dal

பாலக் தால் 
பாலக் / பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் 'ஏ', 'பி', 'சி ' ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன.பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.

இவ்வளவு நண்மைகள் கொண்ட பாலக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.பாலக் கீரைக்கொண்டு பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று தால் பாலக் செய்முறை காட்டி உள்ளேன்.பின் வரும் பதிவுகளில் பாலக் பனீர்,பாலக் சட்னி ,பாலக் பக்கோடா,பாலக்  ரைஸ்,போன்றவற்றின் செய்முறைகளை பதிவிடுகிறேன்.
சரி தேவையான பொருட்களை பார்ப்போம்...


தேவையானவை:
பாலக்கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - 10
                  (அ)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பற்கள்
சாம்பார் பொடி-1/2 tsp
மிளகாய் பொடி - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • பாலக்கீரையுடன் தண்ணீர், சிறுது மஞ்சள், பூண்டு,எண்ணெய் சேர்த்து  மசிய வேகவிடனும்.
  • கடாயில் எண்ணெய்விட்டு,கடுகு சீரகம் தாளித்து இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கணும்.


  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.


  • 2 நிமிஷம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சாம்பார் பொடி,சிறுது உப்பு  சேர்த்து வதக்கவும்.


  • தக்காளி மசிய வெந்ததும்,சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கலந்து வேகவிடனும்.


  • தண்ணீர் சேர்க்க வேண்டாம். கீரை வேகும்போது விடும் நீரே போதுமானதாக இருக்கும். கீரை நல்ல வெந்தததும்  வேகவைத்த பருப்பு தேவையான உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும். 



  • கரண்டி அல்லது மத்து கொண்டு நல்லா மசிச்சு விட்டு கீரை வெந்து குழம்பு கொதிக்கும் போது தீயை அணைச்சுட்டு சூடான சாதத்துடன் பரிமாறினா சுவையா இருக்கும். கூடவே உருளை சிப்ஸ் சுப்பர் காம்பினேசன்......


டிப்ஸ்:
எந்த கீரை உணவு தயாரித்தாலும், கூட புளிப்பு சுவையுள்ள தக்காளி,புளி ,எழும்பிச்சை சாறு,இதில் எதாவது ஒன்றை சேர்த்தால் கீரையில் இருக்க இரும்பு சத்து முழுவதுமா உடலுக்கு கிடைக்கும்.எல்லா வகை கீரைகளிலும் இரும்பு சத்து இருக்கும். விட்டமின் -C  இரும்பு சத்தை உடல் கிரகிக்க உதவி செய்யும்.தக்காளி,புளி,எலுமிச்சை  இவை அனைத்திலும் விட் - C இருக்கு.அதனால இதில் எதாவது ஒன்றை கண்டிப்பா சேருங்க.

ஸ்பைசி காலிப்ளவர் வறுவல் 

ரெசிபி காண இங்கே கிளிக்கவும்.

No comments:

Post a Comment

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....