Sunday, 16 June 2013

பரோட்டா

 ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா  வீட்டில் செய்ய முடியுமா ? அந்த டேஸ்ட் வருமா? என்று நாம் பலரும் நினைப்போம் . இன்னைக்கு  நான் கொஞ்சும் இதை உங்களுடன் பகிரலாம் என்று நினைகின்றேன்  . பரோட்டாவை வீட்டிலேயே  எப்படி மிருதுவாக செய்றதுன்னு இதில் காட்டியிருக்கிறேன் . நீங்களும் செய்துபாருங்கள்.





தேவையான பொருட்கள் :

மைதா - 500 கிராம்
உப்பு - 1 tspn
சர்க்கரை -1tbsp
நெய் (அ ) வெண்ணெய்  - 1 tspn
 (அ ) டால்டா
சோடா உப்பு - 1/4 tspn
 பால் - மாவு பிசைய தேவையான அளவு

செய்முறை :

மைதா மாவுடன் உப்பு ,சர்க்கரை , சோடா உப்பு , நெய் சேர்த்து நன்றாக கலக்கவும் . பிறகு அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசையவும் .

சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் மிருதுவாக இருக்க வேண்டும் . மிகவும்
கெட்டியாக இருக்க கூடாது .

 பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி விடவும். 3-4 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும் .



இப்பொழுது  ஊறவைத்த பரோட்டா மாவினை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும் . சப்பாத்தி கல்லில் சிறிது எண்ணெய் தடவி  ஒரு உருண்டையை  வட்டமாக தட்டவும் .


அதன் மேல் எண்ணையை தடவவும் . இதனை மேலே  உள்ள படத்தில் காட்டியுள்ளபடி  மடியுங்கள் . மடித்ததை சுருட்டி  கொள்ளுங்கள் . அதன் மேல்
எண்ணையை தடவுங்கள் . மீண்டும் இதை தேய்த்து கொள்ளுங்கள் .



இதை தோசை கல்லில் போட்டு இரண்டு புறமும் சிறிது எண்ணையை தடவி
 நன்றாக சுட்டு எடுத்து பரிமாறவும்.



சுவையான ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா 




அடுத்த பதிப்பில் சால்னாவை பற்றி பார்க்கலாம் .

குறிப்பு :   

மாவை பிசைந்து குறைந்தது 3-4 மணி நேரமாவது ஊறவேண்டும் . அப்பொழுது  தான் நன்றாக இருக்கும். 

இன்னொரு முறையிலும் இதை செய்யலாம். இதனுடன் ஒரு முட்டையை  சேர்த்து , பாலிற்கு பதிலாக தண்ணீர் சேர்த்து பிசைந்து  தயார் செய்யலாம். 
இம்முறையில் செய்யும் பொழுது ஹோட்டல் பரோட்டா, வாசனை கிடைக்கும் .
நாளை சால்னா செய்முறை பார்க்கலாம்...



சோலே மசாலா 

ரெசிபி காண இங்கே கிளிக்கவும்.

7 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..தொடர்ந்து வருகை தர வேண்டுகிறோம்..

      Delete
  2. நல்லா இருக்கு.. செய்து பார்த்துட்டேன் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி....நீங்க செய்து பார்த்துட்டு கருத்து எழுதியதில் மகிழ்ச்சி .மேலும் பல ரெசிபியை ட்ரை செய்து பார்த்துட்டு கருத்தை எழுதுங்க.

      Delete
  3. பார்க்கவே நல்லா இருக்கு டேஸ்டும் அருமையாக இருக்கும் என நினைக்கிறேன் பேசாம அமெரிக்கா வந்துடுங்க புரோட்டக்கடை ஆரம்பிச்சிடலாம்

    ReplyDelete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....