புதினா சாதம் எளிதா செய்யக்கூடிய கலவை சாத வகை. லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற உணவு.அதுமட்டும் இல்லாமல் புதினா உடல் ஆரோகியதிற்கும் நல்லது.
நான் இதை மிகவும் சுலபமான முறையில் செய்து காட்டியுள்ளேன். நீங்கள் மீதமான சாதத்தை கூட இதற்கு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - 1 கப்
வெங்காயம் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
குடை மிளகாய் - 1/4 கப்
முந்திரி - 10-15
பட்டை - 1"
ஏலக்காய் - 1
லவங்கம் - 3-4
பிரிஞ்சி இலை - 1
எண்ணெய் - 2tsp
நெய் - 2tbsp
உப்பு- ருசிகேற்ப
மசாலா அரைபதற்கு :
புதினா - 1 கொத்து
பச்சை மிளகாய் - 3-4 நீளவாக்கில் அறிந்தது
இஞ்சி - 1 tspn நறுக்கியது
துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை :
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி & பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் . பிறகு அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து , நன்றாக வதக்கவும் .
வதக்கிய கலவையை மிக்ஸ்யில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து , தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும் . கரகரப்பாக இருக்க வேண்டும்.
மற்றொரு கடாயில் நெய்யை சேர்த்து அதில் பட்டை , ஏலக்காய் , லவங்கம் , பிரிஞ்சி இலை , மற்றும் முந்திரியை சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது நறுக்கிய வெங்காயம் , கேரட் , குடை மிளகாய் , சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து , 1-2 நிமிடம் வதக்கவும் . உப்பு ருசியை சரிபார்த்து கொள்ளவும் .
இதனுடன் வேகவைத்து குளிர்ந்த சாதத்தை சேர்க்கவும் . 1-2 நிமிடம் நன்றாக கலந்து விடவும் .
புதினா சாதம் தயார்
வெஜ் ப்ரைட் ரைஸ் |
ரெசிபி காண இங்கே கிளிக்கவும்.
No comments:
Post a Comment
Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....