சால்னாவை சைவ சால்னா , அசைவ சால்னா என்று இரண்டு வகைகளில் இதை செய்யலாம் . ஹோட்டல் சால்னா என்றாலே அதற்கு தனி டேஸ்ட்தாங்க . இன்னைக்கு எங்க வீட்டில் செய்கிற முறையை உங்களுடன் ஷேர் பண்றேன், செய்து பார்த்திட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க. இதை நான் ஹோட்டல் ஒன்றில் கற்றுக்கொண்டேன் . நான் எந்த காய்கறிகளையும் சேர்க்காமல் செய்திருக்கிறேன் , நீங்கள் காளான் அல்லது கோழி சேர்த்தும் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 10 - 15
தக்காளி - 1 பெரியது
பட்டை - 2 சிறியது
லவங்கம் - 3 -4
மிளகாய் தூள் - 1 tsp
மல்லி தூள் - 1/2 tsp
கறி மசாலா - 1 tsp
சிக்கன் மசாலா - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தே.அளவு
எண்ணெய் - 2 tbsp
மசாலா அரைபதற்கு :
தேங்காய் - 1/4 மூடி
பொட்டுகடலை - 1 tbsp
சோம்பு - 1/2 tsp
கசகசா - 1/2 tsp
மிளகு - 1/2 tsp
செய்முறை :
கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும் .
ஒரு குக்கரில் 2 tbsp எண்ணையை சேர்த்து சூடாகவும் . அதில் பட்டை , லவங்கம், சேர்த்து வதக்கவும் . பிறகு அதனுடன் கருவேப்பிலை ,வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது இதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கறி மசாலா தூள் , சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போக வதக்கவும் .
இப்பொழுது அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும் .
கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி 2 விசில் விட்டு அடுப்பை off செய்யுங்கள் . விசில் போனவுடன் கொத்தமல்லி இழை சேர்த்து கலந்து பரிமாறவும் .
மீன் வறுவல் ரெசிபி காண இங்கே கிளிக்கவும் |
ரைட்டு செஞ்சு பார்த்த்ட்டு சொல்றேன்
ReplyDeleteThx
ReplyDelete