Tuesday 18 June 2013

ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli

ஹசிலி ஃபுசிலி /Hasili  Fusilli 
"ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி" 
என்னடா இது சமைக்க வாங்கன்னு போர்ட் போட்டுக்கிட்டு உள்ள பாட்டு வரிகள் இருக்கேன்னு பார்க்குரிங்களா?
இந்த வரியைதான் என் மாண்புமிகு மணவாளன், டிஷ் செஞ்சு முடிகிறவரை பாடிக்கிடே இருந்தார். அதனாலேயே இந்த வெறும் ஃபுசிலி க்கு ஹசிலி ஃபுசிலி ன்னு பெயர் வச்சேன்.



இது தாங்க ஃபுசிலி. அட இது எதோ வித்யசமா இருக்கே நாம எங்க போய் வாங்கறதுன்னு யோசிகிரிங்களா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க. இந்த ஃபுசிலி, பாஸ்தா வோட ஒரு வகை. நான் ஜெர்மனில வசிக்கிறேன். இங்க நிறைய விதமான பாஸ்தா வகைகள் கிடைக்கும். அதுல ஒன்னு தான் இந்த ஃபுசிலி. அதனால நீங்க தாராளமா பாஸ்தாவையே உபயோகிச்சுக்கலாம். இல்ல நீங்க வசிக்கிற ஊர்ல, அல்லது நாட்டுல, என்ன வகை பாஸ்தா கிடைக்குதோ அதை யூஸ் பண்ணுங்க.இன்னைக்கு நான் பாஸ்தாவை நம்ம ஊர் ஸ்டைல்ல எப்படி செய்தேன்னு காட்டி இருக்கேன். இன்னொரு பதிவில சைனீஸ் ஸ்டைல்லயும் ,ஐரோப்பயியன் ஸ்டைல்ளையும் எப்படி செய்றதுன்னு சொல்றேன். 
சரி இப்போ நாம செய்ய தேவையானதை பாப்போம். இது ரெண்டு பேருக்கான அளவு.

தேவையான பொருட்கள் :

ஃபுசிலி / பாஸ்தா - 250 கிராம் 
வெங்காயம் - 1 
பச்சை குடைமிளகாய் - பாதி 
மஞ்சள் குடை மிளகாய் - பாதி 
கேரட் - 1
முட்டைகோஸ் - 1 கப் அளவு 
வெங்காயத்தாள் - 2 தண்டு 
பச்சை மிளகாய் - 1
நூடுல்ஸ் மசாலா - 1/2 பேக்கட் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
எண்ணெய் - 1 டேபுள்ஸ்பூன் 

செய்முறை:

  • பாஸ்தாவை 1/2 மணி நேரம் ஊற வச்சுகனும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணிய நல்லா கொதிக்க வச்சுட்டு அதுல கொஞ்சம் உப்பு,1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவச்ச பாஸ்தாவை போட்டு வேக விடுங்க.


  • 10 நிமிஷம் கழிச்சு அடுப்பை அனைச்சுட்டு பாஸ்தாவை நல்ல வடிசுட்டு மறுபடியும் குளிர்ந்த தண்ணீர்ல அலசனும்.அப்புறம் தண்ணி இல்லாம ஓட்ட வடிகட்டிக்கணும். 


  • இப்போ ஒரு கடாயில் 1 டேபுல்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிடுங்க.நல்லா சூடான பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசனை போக ஃப்ரை பண்ணனும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கணும். 


  • வெங்காயம் கால் பாகம் வதங்கின உடனே பொடியா நறுக்கின காய்கறிகளை சேர்த்து வதக்கணும்.


  • 5 நிமிஷம் கழிச்சு நூடுல்ஸ் மசாலாவை சேர்த்து நல்ல கலந்து விடுங்க.


  • இப்போ பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல கிளறனும்.


  • அப்புறம் பாஸ்தாவை சேர்த்து மசாலா ஈவனா ஓட்டுறது போல கலந்து பாஸ்தா நல்லா சூடகுற வரை  கிளறி விட்டு அடுப்பில இருத்து இறக்கிடுங்க....

  •  சூடான சுவையான பாஸ்தா தயார். செய்றதும் ரொம்ப ஈஸி இல்லைங்களா!


சமைக்க வாங்க .... சாப்பிட்டு பாருங்க....



இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்......
ப்ராக்கோலி ஸ்டிர் ஃப்ரை ரெசிபி காண இங்கே செல்லவும்.

No comments:

Post a Comment

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....