Friday, 14 June 2013

ரோடு சைட் மசாலா பூரி சாட் / Road Side Masala Poori Chaat

ஹாய்!!! வணக்கம்,
முதல்ல என்னோட ப்ளாகுக்கு முதல் முறையா வருகை தந்திருக்கவங்களுக்கும், திரும்ப விசிட் அடிச்சு இருக்கவங்களுக்கும் என்னோட infinitive நன்றிகள். ....

இன்னைக்கு நான் பானி  பூரி ஸ்டால்ல விக்கிற மசாலா பூரி எப்படி செய்றதுன்னு சொல்றேன்.முதல்ல தேவையான பொருட்களை பார்போம்.



 தேவையான பொருட்கள்:

குழம்பிற்கு:

ஊறவைத்த வெள்ளை பட்டாணி - 1 கப்

உருளைக்கிழங்கு - 1 சிறியது
கிராம்பு  - 5
பட்டை  - 1 இன்ச் அளவு
ஜாதிப்பத்திரி  - 1 பின்ச்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

ஆல் இன் ஒன் மசாலாத்தூள் - 1/2 (அ)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு -  1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
புதினா - 5 இலை

உப்பு - ருசிக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை 
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்

பூரி செய்வதற்கு:


மைதா மாவு - 2 டேபுள்ஸ்பூன்
ரவை - 2 கப்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் (பொரிப்பதற்கு) - 2 கப்

அலங்கரிக்கவும், சுவைக்காகவும்:

துருவிய கேரட் - ஒன்று
வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது )
வெள்ளரிக்காய் -1/2  பாகம்(பொடியாக நறுக்கியது ) (optional)
தக்காளி - 1/4 பாகம்(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - 1/4 கப்(பொடியாக நறுக்கியது)



பூரி செய்முறை: (சாரிங்க பூரி செஞ்சத போட்டோ எடுக்கல)
  • முதல்ல ரவைக்கூட மைதா மாவு ,உப்பு கலந்து வெதுவெதுப்பான தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைஞ்சு  1/2 மணி நேரம் ஊற விடுங்க.
  • 1/2 மணி நேரத்துக்கு அப்பறம் மாவ குட்டி குட்டி உருண்டையா பிடிச்சி  பாணி பூரி அளவு தேச்சு சூடான எண்ணெய்ல பொரிச்சு எடுக்கலாம்.
  • இல்லைனா பெருசா உருண்டை பிடிச்சு ,பெருசா பரப்பி ஒரு சின்ன க்ளாஸ் கொண்டோ இல்லை ஒரு மூடி கொண்டோ  வட்ட வட்டமா கட் செஞ்சு எடுத்து எண்ணெயில் போட்டு பொரிச்சுகுங்க.
  • ரொம்ப நேரம் கழிச்சு  பரிமாறுவதா இருந்த சூடு ஆறின பிறகு காற்று புகாதவறு ஒரு பாத்திரத்தில் போட்டு வச்சுடுங்க.
இப்போ பூரி தயார். அடுத்து குழம்பு செய்யலாம்...
.
  • மஞ்சள்/ வெள்ள பட்டானிய காலைலேயே தண்ணில ஊற வச்சிடணும். அதாவது சாயங்காலம் மசாலா பூரி செய்ய பிளான் பண்ணினா காலைலயே ஊறவைங்க

  • ஊறவச்ச பட்டாணிய அது முழுகுற அளவு தண்ணி ஊற்றி கொஞ்சம் மஞ்சள்,    1/4 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைங்க. உங்க குக்கர்ல எத்தன விசில் விட்டா நல்ல வேகுமோ அத்தன விசில் விட்டு வேக வசுங்குங்க.
  • சமையலுக்கு புதுசா? அப்டின்னா 3 விசில் விட்டுட்டு ஓபன் பண்ணி பாருங்க. ஒரு வேலை வேகலன்ன!! மறுபடியும் மூடி இன்னொரு விசில் விடுங்க...  



  • இப்போ வேகவச்ச பட்டாணில கால் பாகம் தனியா வடிகட்டி எடுதுவச்சுகுங்க. இது கடைசில மிக்சிங் செய்ய.





  • மீதம் இருக்குற பட்டாணி கூடவே வடிகட்டின தண்ணிய ஊத்தி தோல் உரிச்சு கட் பண்ணின உருளை கிழங்கு சேர்த்து 2 விசில் விடுங்க. நல்லா மசியிற அளவு வேகவச்சுக்கனும்.


  • இப்போ ஸ்மேஷர் (அ) கரண்டி வச்சு மசிச்சுக்கணும்.


  • பட்டை,கிராம்பு,ஜாதிபத்ரி, மூனையும் இடிச்சு பவுடர் பண்ணிகோங்க.


  • மசிச்சு வச்ச பட்டாணி கூட மிளகாய்த்தூள் 1 சிட்டிகை பெருங்காயம், இடிச்ச மசாலா பவுடர் தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்ப அடுப்பில் வச்சு மீண்டும் சூடாக்கனும்.
  • கார்ன்ஃப்ளார் மாவை 1/4 கப் தண்ணீருடன் கரைத்து குழம்பில் ஊற்றி கிளறனும். குழம்பு கெட்டியாகத் தொடங்கும்.
  • குழம்பு கொதித்ததும் தீயை அணைச்சுட்டு புதினா மற்றும் கறிவேப்பிலையை போட்டு கிளறி குழம்பை மூடி வைச்சுடுங்க.




  • கேரட், வெங்காயம்,கொத்தமல்லி,தக்காளி,வெள்ளரிக்காய் எல்லாவற்றையும் பொடியா கட் பண்ணி வச்சுக்குங்க.

  • பரிமாறும்பொழுது தட்டில் முதலில் பூரிகளை வைத்து மேலே சூடான பட்டாணி குழம்பை ஊற்றி, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள கேரட், வெங்காயம், மல்லி இலை, தக்காளி தூவி உடனே பரிமாறவும்.
வீட்டிலேயே ஹைஜீனிக்கான டேஸ்டி மசாலா பூரி ரெடி.



4 comments:

  1. ஹைய்யோ... கடைகள்ல சாப்பிடறப்ப சில இடங்கள்ல சொத்ப்பும், சில இடங்கள்ல டேஸ்டியாக் கெடைக்கும். இத எப்படித்தான் பண்றாங்களோன்னு நினைச்சதுண்டு நான். இப்ப சிம்பிளா படங்களோட நீங்க விளக்கினதுல ரொம்ப குஷியாய்டுச்சு. ரொம்ப டாங்ஸு!

    ReplyDelete
    Replies
    1. நீங்க கரமசலா சேற்கவே இல்லையே .ஆனால் தேவையான பொருள்கள்ல இருக்கு.அப்பறம் பட்டை இல்லவேல்ல நீங்க சேத்து இருக்கீங்க ஏன் காரணம் சொல்லுங்க

      Delete
  2. நீங்க கரமசலா சேற்கவே இல்லையே .ஆனால் தேவையான பொருள்கள்ல இருக்கு.அப்பறம் பட்டை இல்லவேல்ல நீங்க சேத்து இருக்கீங்க ஏன் காரணம் சொல்லுங்க

    ReplyDelete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....