குடைமிளகாய் புளி கறி |
தேவையானபொருட்கள்:
குடைமிளகாய் - 2 மீடியம் சைஸ்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபுள்ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டேபுள்ஸ்பூன்
பொட்டுகடலை - 2 டேபுள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
பூண்டு - 3 பல்
தண்ணீர் - அரைக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரைக்க தேவையான பொருட்களை அரச்சுகுங்க.
1.தேங்காய் துருவல், பொட்டுகடலை,பூண்டு, புளி, வரமிளகாய் எல்லாத்தையும் தண்ணீர் சேர்த்து நைசா அரச்சு ரெடியா வச்சுக்கணும்.
2.இப்போ ஒரு கடாயில எண்ணையை ஊற்றி காயவிடுங்க. நல்லா சூடான பிறகு சீரகம் போட்டு வெடிக்கும் வரை விடனும்.
3. சீரகம் நல்லா வெடிச்ச உடனே வெட்டி வச்ச காப்சிகம் துண்டுகள போட்டு 3 நிமிஷம் நல்லா ப்ரை பண்ணனும்.
4. காப்சிகம் கொஞ்சம் வதங்குனதும்,மஞ்சள் தூள்,பாதி அளவு உப்பு போட்டு கிளறனும்.
5.பாதி வெந்ததும் அரச்சு வச்ச பேஸ்ட்ட கொட்டி நல்லா கலக்கணும்.
6. இந்த ஸ்டேஜுல மிளகாய் தூள்,கரம் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி 5 நிமிஷம் மூடி வச்சு வேக விடுங்க.
7. 5 நிமிஷத்துக்கு அப்புறம் எண்ணை பிரிஞ்சு வர்ற ஸ்டேஜ்ல அடுப்ப அனச்சுடுங்க.
8. டேஸ்ட்டான குடைமிளகாய் புளி கறி ரெடி. உங்களுக்கு பிடிச்ச காம்பினேசன்ல சர்வ் பண்ணுங்க!
9. நான் இங்க வைட் ரைஸ் கூட சர்வ் பண்ணி இருக்கேன்.
குறிப்பு :
- புளியை தண்ணீர்ல 10 நிமிஷம் ஊறவச்சு அரச்சா ஈஸியா அரைக்கலாம்.
- புளி,தேங்காய் அளவுகள் தேவையானா சேர்த்து (அ) குறைச்சுக்கலாம்.
- எண்ணெய் அளவு அதிகமா இருக்குன்னு நினைச்சா குறைச்சுகுங்க. நான் எப்பவுமே கொஞ்சம் எண்ணெய் அதிகமா தான் யுஸ் பண்ணுவேன்.
. நான் எப்பவுமே கொஞ்சம் எண்ணெய் அதிகமா தான் யுஸ் பண்ணுவேன். //எண்ணையே ருசியை அதிகப்படுதுமே.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
Deleteகுடை மிளகாய் புளிக்கறி படமும் விளக்கமும் படிக்கறப்ப நல்லாவே இருக்கும்னு நம்பிக்கை வந்துடுச்சு. ஆனா நான் உங்க ப்ளாக் தலைப்புப் படி சமைக்க வர்றவன் இல்ல... சாப்பிட மட்டும் வர்ற ஆள்... ஹி.. ஹி...! அதனால வீட்ல செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பாத்துடறேன்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு மறக்காம கருத்தை எழுதுங்க..
Deletenaan seithu paarththen mikavum rusiyaaka irunthathu nandry
ReplyDelete