Friday, 28 June 2013
Wednesday, 26 June 2013
பஞ்சாபி ஸ்டைல் தால் தட்கா/ PUNJABI DAL TADKA
பஞ்சாபி ஸ்டைல் தால் தட்கா |
இது பஞ்சாப் உணவு வகைகளில் மிக பிரபலமான, மிக எளிதான, சுவையான ஒரு சைட் டிஸ். அதுதாங்க நம்ம பருப்பு குழம்பையே கொஞ்சம் வித்தியாசமா தாளிச்சு கொட்டி அதுக்கு ஒரு பேர். இல்ல இது அவங்க ஊர் பருப்பு குழம்புன்னு வச்சுகுங்களேன்.ஏதுவா இருந்தா என்ன, சுவை கொஞ்சம் வித்தியாசமாகவும்,சாப்பிட நல்லாவும் இருந்தா அது போதும் இல்லைங்களா.
Monday, 24 June 2013
ப்ரட் உப்புமா / Bread Upma
ப்ரட் உப்புமா |
ப்ரட் உப்மா அவசர சமயத்தில் கைகொடுக்கும் ஆபத்பாண்டவன். ஆனால் அவசர அவசரமாக செய்தாலும் டேஸ்ட் குறையாது. இதை நான் என் கணவரிடம் தான் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இப்படி ப்ரட்ல உப்புமா செய்யலாம்னு தெரியாது. ஆனா இப்போ இது என்னோட பேவரெட் ரெசிபி.இது எனக்கு பிடிச்ச ரெசிபிங்கரதுனால வாரம் ஒருமுறை கண்டிப்பா செய்வேன். இன்னைக்கு நான் காய்கறி எதுவும் சேர்க்காமல் வெங்காயம்,தக்காளி மட்டும் யூஸ் பண்ணி அவசர சமயத்துல எப்படி செய்யலாம்னு சொல்லி இருக்கேன். ரிலேக்ஸா இருக்கும் போது செய்யறதா இருந்தா உங்களுக்கு பிடிச்ச காய்கறிகளை ஆவியில் வேகவச்சு சேர்த்துகுங்க. நான் whole wheat bread ல செய்தேன். நீங்க உங்க விருப்பமான அதாவது வைத் ப்ரட் (அ) வீட் ப்ரட் எதுல வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா சால்ட் ப்ரட்ல தான் செய்யணும்.
Friday, 21 June 2013
பரோட்டா சால்னா
சால்னாவை சைவ சால்னா , அசைவ சால்னா என்று இரண்டு வகைகளில் இதை செய்யலாம் . ஹோட்டல் சால்னா என்றாலே அதற்கு தனி டேஸ்ட்தாங்க . இன்னைக்கு எங்க வீட்டில் செய்கிற முறையை உங்களுடன் ஷேர் பண்றேன், செய்து பார்த்திட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க. இதை நான் ஹோட்டல் ஒன்றில் கற்றுக்கொண்டேன் . நான் எந்த காய்கறிகளையும் சேர்க்காமல் செய்திருக்கிறேன் , நீங்கள் காளான் அல்லது கோழி சேர்த்தும் இதை செய்யலாம்.
பாலக் தால் / Palak Dal
பாலக் தால் |
பாலக் / பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் 'ஏ', 'பி', 'சி ' ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன.பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.
இவ்வளவு நண்மைகள் கொண்ட பாலக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.பாலக் கீரைக்கொண்டு பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று தால் பாலக் செய்முறை காட்டி உள்ளேன்.பின் வரும் பதிவுகளில் பாலக் பனீர்,பாலக் சட்னி ,பாலக் பக்கோடா,பாலக் ரைஸ்,போன்றவற்றின் செய்முறைகளை பதிவிடுகிறேன்.
சரி தேவையான பொருட்களை பார்ப்போம்...
இவ்வளவு நண்மைகள் கொண்ட பாலக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.பாலக் கீரைக்கொண்டு பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று தால் பாலக் செய்முறை காட்டி உள்ளேன்.பின் வரும் பதிவுகளில் பாலக் பனீர்,பாலக் சட்னி ,பாலக் பக்கோடா,பாலக் ரைஸ்,போன்றவற்றின் செய்முறைகளை பதிவிடுகிறேன்.
சரி தேவையான பொருட்களை பார்ப்போம்...
Wednesday, 19 June 2013
Tuesday, 18 June 2013
ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli
ஹசிலி ஃபுசிலி /Hasili Fusilli |
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி"
என்னடா இது சமைக்க வாங்கன்னு போர்ட் போட்டுக்கிட்டு உள்ள பாட்டு வரிகள் இருக்கேன்னு பார்க்குரிங்களா?
இந்த வரியைதான் என் மாண்புமிகு மணவாளன், டிஷ் செஞ்சு முடிகிறவரை பாடிக்கிடே இருந்தார். அதனாலேயே இந்த வெறும் ஃபுசிலி க்கு ஹசிலி ஃபுசிலி ன்னு பெயர் வச்சேன்.
Sunday, 16 June 2013
முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry
Muniyandi Vilas Chicken Curry |
இப்போ தேவையான பொருட்களை பார்போம்.....
Saturday, 15 June 2013
SURUL POORI / சுருள் பூரி
சுருள் பூரி ஒரு சுவையான , கரகரப்பான இனிப்பு வகை ஆகும் . இதை இரண்டு வகைகளில் சமைக்கலாம் . ஒன்று பொடித்த சர்க்கரை பொடியை துவி செய்வது , மற்றொன்று சர்க்கரை பாகில் ஊறவைத்து சுவைப்பது . இங்கு நான் இரண்டாவது முறையில் இதை செய்துள்ளேன் .இதில் நான் உணவு கலரை சேர்த்து ஒரு புதிய முறையில் செய்துள்ளேன் . நீங்களும் செய்து பாருங்கள் . உணவு கலரை சேர்க்காமலும் இதை தயார் செய்யலாம் .
Subscribe to:
Posts (Atom)