ப்ரட் உப்புமா |
ப்ரட் உப்மா அவசர சமயத்தில் கைகொடுக்கும் ஆபத்பாண்டவன். ஆனால் அவசர அவசரமாக செய்தாலும் டேஸ்ட் குறையாது. இதை நான் என் கணவரிடம் தான் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இப்படி ப்ரட்ல உப்புமா செய்யலாம்னு தெரியாது. ஆனா இப்போ இது என்னோட பேவரெட் ரெசிபி.இது எனக்கு பிடிச்ச ரெசிபிங்கரதுனால வாரம் ஒருமுறை கண்டிப்பா செய்வேன். இன்னைக்கு நான் காய்கறி எதுவும் சேர்க்காமல் வெங்காயம்,தக்காளி மட்டும் யூஸ் பண்ணி அவசர சமயத்துல எப்படி செய்யலாம்னு சொல்லி இருக்கேன். ரிலேக்ஸா இருக்கும் போது செய்யறதா இருந்தா உங்களுக்கு பிடிச்ச காய்கறிகளை ஆவியில் வேகவச்சு சேர்த்துகுங்க. நான் whole wheat bread ல செய்தேன். நீங்க உங்க விருப்பமான அதாவது வைத் ப்ரட் (அ) வீட் ப்ரட் எதுல வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா சால்ட் ப்ரட்ல தான் செய்யணும்.