Monday, 15 July 2013

காலிப்ளவர் போண்டா & பக்கோடா / Cauliflower Bonda & Pakoda

 உருட்டி போட்டா 
உதிர்த்து போட்டா 

ஒரு படத்தில் நடிகர் கருணாஸ் சொல்லுவாரு," டேய் மச்சான் உருட்டி போட்டா போண்டா ,தட்டி போட்டா வடை,இதுதாண்டா வாழ்க்க! அப்படின்னினு. இந்த ரெசிபிக்கு அந்த டைலாக் நல்லா மேட்ச் ஆகும். போண்டா, பக்கோடா ரெண்டுமே ஒரே பேட்டர்ல தான் செய்யணும். ஆனா செய்ற விதம் தான் கொஞ்சம் வித்தியாசப்படும். மாலை வேளையில், மழை தூரலில், பால்கனி மேடையில், ஒரு கையில் சுடசுட தேனீர், மறு கையில் கர கர மொரு மொரு பக்கோடா! வாவ் செம சுட்ச்சுவேசன் இல்லங்க... சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Thursday, 11 July 2013

ஆல் இன் ஒன் மசாலா தூள்/ All In One Masala Powder


இந்த ஆள் இன் ஒன் மசாலா தூளை நீங்க ஆல்மோஸ்ட் எல்லா ரெசிபியிலும் யூஸ் பண்ணிக்கலாம். அதாவது வெஜ் குருமா,சிக்கன் கறி, பொரியல், வறுவல், ஃபிரை,தந்தூரி,சில்லி ஐடம்ஸ்.... எல்லாத்துக்குமே யூஸ் பண்ணலாம்.வேற மசாலா அதாவது தனியா தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,கரம் மசாலா அப்படின்னு தனிதனியா எதுவும் சேர்க்காமல் இத மட்டும் சேர்த்தாலே போதும். சுருக்கமா சொல்லனும்னா ஆள் பர்பஸ் மசாலா.

Tuesday, 9 July 2013

சாப்ட் மைசூர் பாக் / Soft Mysore Pak


மைசூர் பாக் நெனச்ச உடனே செய்யும் இனிப்பு வகை இல்லை. கொஞ்சம் தயக்க பட வைக்கும் ஸ்வீட் தான். ஏன்னா பதம் கொஞ்சம் முன்ன பின்ன போனாலும் எடுத்துக்கிட்ட சிரமம் எல்லாம் வீனா போய்டும். பதத்துக்கு முன்னாலேயே இறக்கிட்டா ஹல்வா போல இருக்கும். கொஞ்சம் அசந்து விட்டுட்டோம்னா கள்ள வச்சு உடைச்சு சாப்பிடுற அளவு பர்பி போல ஆயிடும்.   சரி இன்னைக்கு இவ்வளவு கஷ்டமான இந்த ஸ்வீட்டை எப்படி ஈசியா செய்யறதுன்னு பார்க்கலாம்.

Thursday, 4 July 2013

டேஸ்டி இட்லி மஞ்சூரியன் / Tasty Idly Manchurian


மீந்து போன இட்லியை என்னடா பன்றதுன்னு முன்னெல்லாம் உப்மா செஞ்சு சாப்பிடுவோம்.ஆனா இப்போ இட்லிய வச்சு செய்யற நிறைய புது புது ஐட்டங்கள் வந்துடுச்சுங்க. மீந்து போச்சேன்னு அத வச்சு வேற எதாவது சமையல் செய்ற காலம் போய்,சில ஸ்பெஷல் ஐட்டம் செய்றதுக்காவே இப்போதெல்லாம் இட்லிய செய்யறாங்க. ஹீ...ஹீ..ஹீ..நானும் அப்படித்தான். 

Wednesday, 3 July 2013

ஆலு கோபி குருமா / Aaloo Gobi Kurma


இது மிக எளிதாக செய்யக்கூடிய குருமா வகை. இதுல ப்ரெஸ்ஷா மசாலாக்களை அரச்சு சேர்க்கரதுனால டேஸ்டும் நல்லா இருக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உருளை கிழங்கும்,காலிப்ளவரும் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிச்ச காய்கறியா தான் இருக்கும்.அதனால அடிக்கடி இதை செய்யலாம். இந்த குருமா ல உங்களுக்கு பிடிச்ச எந்த காய்கறிய வேணாலும் சேர்த்துக்கலாம். கேரட், பீன்ஸ், நூல்கோல் ,பட்டாணி, மீல்மேக்கர்,.....எந்த காம்பினேசன்  ல வேணாலும் செய்யலாம்.இல்லனா ஒரே ஒரு காய்கறி மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

Sunday, 30 June 2013

சில்லி கார்லிக் சாஸ் செய்வது எப்படி?/Chilli Garlic Sauce




ஹாய் இன்னைக்கு சில்லி கார்லிக் சாஸ் எப்படி வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றேன்.உங்களுக்கு தேவையான அளவு  செய்து ஃபிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணிக்கலாம். இது செய்றதும் ரொம்ப ஈசி. அதனால தேவையான போது குறைஞ்ச அளவு செஞ்சுக்கலாம். ஃப்ரெஷ்சா யூஸ் பண்ணலாம்.கடைகள்ல வாங்குற சாஸ்ல ஏகப்பட்ட ப்ரிசர்வேடிவ்ஸ் கலந்திருப்பாங்க.முடிஞ்ச அளவு ஈசி செய்ய கூடியதையாவது நாம வீட்டிலேயே தயார் செய்து யூஸ் பண்ணினா ஹெல்த் ரிஸ்க் குறையும் இல்லைங்களா? முடிந்தவரை டின் ஃபுட்,ரெடிமேட் உணவு வகைகளை குறைவா பயன்படுத்துவது உடல் ஆரோகியதிற்கு நல்லது. பின் வரும் பதிவில் வீட்டில் எளிதாக செய்ய கூடிய பொடி வகைகள்,தொக்கு வகைகளை பார்க்கலாம்.

Saturday, 29 June 2013

பனீர் 65 / Paneer 65


பனீர் 65 என் கணவரோட ஃபேவரெட் ரெசிபி. இது பார்க்க மட்டும் இல்லங்க சுவையும் அல்லும். செய்றதுக்கு கொஞ்சம் நேரம் பிடிச்சாலும் சாப்பிடும் போது எல்லாமே மறந்துடும். சனி,ஞாயிருல செய்ய ஏற்ற ஸ்நாக்ஸ். இதே முறைல சிக்கன் 65 கூட செய்யலாம்.இந்த ரெசிபி கொஞ்சம் ஸ்பைசியா தான் இருக்கும். உங்க வீட்டு சுவைக்கு ஏற்ற மாறி காரத்தை குறைச்சுக்கலாம். 

Friday, 28 June 2013

வீட்டிலேயே செய்யலாம் கறிமசாலா தூள்



கறிமசாலா, கரம் மசாலா ரெண்டுமே ஒன்னா? இல்ல வேற வேறயா? வேற வேறன்னா எத எதுல சேர்க்கணும்?அத வீட்டிலேயே செய்யமுடியுமா?மசாலா ஜாஸ்தி சேர்த்தா உடலுக்கு கெடுதல்னு சொல்றாங்களே? ஹைய்யோ என்ன தான் செய்றது? 

Wednesday, 26 June 2013

பஞ்சாபி ஸ்டைல் தால் தட்கா/ PUNJABI DAL TADKA

பஞ்சாபி ஸ்டைல் தால் தட்கா

இது பஞ்சாப் உணவு வகைகளில் மிக பிரபலமான, மிக எளிதான, சுவையான ஒரு சைட் டிஸ். அதுதாங்க நம்ம பருப்பு குழம்பையே கொஞ்சம் வித்தியாசமா தாளிச்சு கொட்டி அதுக்கு ஒரு பேர். இல்ல இது அவங்க ஊர் பருப்பு குழம்புன்னு வச்சுகுங்களேன்.ஏதுவா இருந்தா என்ன, சுவை கொஞ்சம் வித்தியாசமாகவும்,சாப்பிட நல்லாவும் இருந்தா அது போதும் இல்லைங்களா.

Monday, 24 June 2013

ப்ரட் உப்புமா / Bread Upma



ப்ரட் உப்புமா
ப்ரட் உப்மா அவசர சமயத்தில் கைகொடுக்கும் ஆபத்பாண்டவன். ஆனால் அவசர அவசரமாக செய்தாலும் டேஸ்ட் குறையாது. இதை நான் என் கணவரிடம் தான் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இப்படி ப்ரட்ல உப்புமா செய்யலாம்னு தெரியாது. ஆனா இப்போ இது என்னோட பேவரெட் ரெசிபி.இது எனக்கு பிடிச்ச ரெசிபிங்கரதுனால வாரம் ஒருமுறை கண்டிப்பா செய்வேன். இன்னைக்கு நான் காய்கறி எதுவும் சேர்க்காமல் வெங்காயம்,தக்காளி மட்டும் யூஸ் பண்ணி அவசர சமயத்துல எப்படி செய்யலாம்னு  சொல்லி இருக்கேன். ரிலேக்ஸா  இருக்கும் போது செய்யறதா இருந்தா உங்களுக்கு பிடிச்ச காய்கறிகளை ஆவியில் வேகவச்சு சேர்த்துகுங்க. நான் whole wheat bread ல செய்தேன். நீங்க உங்க விருப்பமான அதாவது வைத் ப்ரட் (அ) வீட் ப்ரட் எதுல வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா சால்ட் ப்ரட்ல தான் செய்யணும்.