இது மிக எளிதாக செய்யக்கூடிய குருமா வகை. இதுல ப்ரெஸ்ஷா மசாலாக்களை அரச்சு சேர்க்கரதுனால டேஸ்டும் நல்லா இருக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உருளை கிழங்கும்,காலிப்ளவரும் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிச்ச காய்கறியா தான் இருக்கும்.அதனால அடிக்கடி இதை செய்யலாம். இந்த குருமா ல உங்களுக்கு பிடிச்ச எந்த காய்கறிய வேணாலும் சேர்த்துக்கலாம். கேரட், பீன்ஸ், நூல்கோல் ,பட்டாணி, மீல்மேக்கர்,.....எந்த காம்பினேசன் ல வேணாலும் செய்யலாம்.இல்லனா ஒரே ஒரு காய்கறி மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
தேவையானவை
உருளைகிழங்கு - 3 (மீடியம் சைஸ்)
காலிப்ளவர் - 2 கப் (அ) ஒரு சிறிய பூ
சின்ன வெங்காயம் - 15
(அ)
பெரிய வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 1
கருவப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - ஒரு பிடி
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் அ ருசிக்கேற்ப
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் - 3/4 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 4 சிறிய பற்கள் (அ) 2 பெரிய பற்கள்
பொட்டுகடலை - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 இஞ்ச் அளவு
கிராம்பு - 6
தனியா விதை - 1 டீஸ்பூன்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1 (optional)
செய்முறை பட விளக்கத்துடன் Youtube வீடியோவில் கீழே...
குறிப்பு
- நான் ஏலக்காய் சேர்க்கவில்லை. உங்களுக்கு ஏலக்காய் வாசனை பிடித்தால் தாராளமாக சேர்த்து கொள்ளுங்கள்.
- இந்த குருமா, சாதம்,சப்பாத்தி,பரோட்டா,தோசை எல்லாத்துக்குமே நல்லா இருக்கும்.
No comments:
Post a Comment
Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....