மீந்து போன இட்லியை என்னடா பன்றதுன்னு முன்னெல்லாம் உப்மா செஞ்சு சாப்பிடுவோம்.ஆனா இப்போ இட்லிய வச்சு செய்யற நிறைய புது புது ஐட்டங்கள் வந்துடுச்சுங்க. மீந்து போச்சேன்னு அத வச்சு வேற எதாவது சமையல் செய்ற காலம் போய்,சில ஸ்பெஷல் ஐட்டம் செய்றதுக்காவே இப்போதெல்லாம் இட்லிய செய்யறாங்க. ஹீ...ஹீ..ஹீ..நானும் அப்படித்தான்.
சில்லி இட்லி, இட்லி மஞ்சூரியன்,இட்லி ஃப்ரை, தயிர் இட்லி, பொடி இட்லி,சட்னி இட்லி,......இன்னும் நிறைய இருக்கு.எனக்கு என் அக்கா செய்து கொடுத்த ஸ்பைசி ஊறுகாய் இட்லிய மறக்கவே முடியாது. ஏதோ டிவி ப்ரோகிராம்ல பார்த்து செய்து குடுத்தா. இட்லிய சின்ன சின்னதா கட் பண்ணி ஊருகாய்ல மேரினேட் செஞ்சு, தோசைக்கல்லுல கொஞ்சமா எண்ணெய் விட்டு, இட்லிய போட்டு தீயை சிம்முல வச்சு நல்லா மொரு மொறுன்னு ஆகர வரை ரோஸ்ட் பண்ணி சுட சுட குடத்தா. சூப்பரா இருந்தது அந்த டேஸ்ட் இப்பவும் எனக்கு நியாபகம் இருக்கு. சரி அத விடுங்க இன்னைக்கு கதைக்கு வருவோம். இட்லி மஞ்சூரியன் எப்படி செய்றதுன்னு பார்கலாம்... எனக்கு மஞ்சுரியன் ரொம்ப பிடிக்கும், அது எந்த வகையானாலும் சரி. இந்த ரெசிபியை சாப்பிட்டு பார்த்துட்டு நிறைய ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட ரெசிபி கேட்டு வாங்கி இருக்காங்க. இன்னைக்கு இந்த ரெசிபியை நான் உங்களுக்கு ஷேர் பண்ணுறேன்.
தேவையானவை:
6-8 இட்லி - சதுரமாக கட் செய்தது
மைதா - 2 டேபுள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார்(சோளமாவு) - 1 டேபுள்ஸ்பூபூன்
அரிசி மாவு - 1/2 டேபுள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு
சமையல் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - மாவு கலக்க
முட்டைகோஸ் - 1 கப் (விரும்பினால்)
கருவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சாஸ் தயாரிக்க :
பூண்டு - 1+1/2 டேபுள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கவும்
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
குடை மிளகாய் - 1 பெரியது
ரெட் சில்லி சாஸ் - 1 டேபுள்ஸ்பூன்
லைட் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் - 1+1/2 டேபுள்ஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
வெங்காயத்தாள் - 1/4 கப்
செய்முறை :
- இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயம்,குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.வெங்காயத்துன்டுகளை இதழ் இதழாக பிரித்து வைக்கவும்.
- பூண்டு, பச்சைமிளகாய் இரண்டையும் பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா,சோளமாவு , அரிசி மாவு, கடலை மாவு,மிளகுத்தூள்,உப்பு,சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மீடியமில் வைத்து எண்ணெய்யை நன்றாக சூடு படுத்தவும்.
- எண்ணெய் நன்றாக சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிரமாக பொரித்தெடுக்கவும்.
- கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கிய முட்டைகோஸை பிரட்டி எண்ணெயில் பொறித்து அதனுடன் கருவேப்பிலையையும் சேர்த்து மொரு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
- இப்போது ஒரு பேனில் 1+1/2 டேபுள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயையும் சேர்க்கவும்.
- பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கிளறவும்.
- 2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது சோயாசாஸ், கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை,சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.
- உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.
- கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
- பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ்,கருவேப்பிலை சேர்த்து கொடுத்தால் பார்க்க மட்டும் இல்லங்க சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
செய்து சுவையுங்கள், சுவைத்து மகிழுங்கள், இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.....
super.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDeleteசெய்முறை விளக்கத்தோடு புகைப்படங்களையும் சேர்த்து அசத்திவிட்டீர்கள். அருமையான பதிவு.
ReplyDeleteகருத்திற்க்கு மிக்க நன்றி....
Deleteyum yum yum
ReplyDelete