Showing posts with label சாஸ். Show all posts
Showing posts with label சாஸ். Show all posts

Sunday, 30 June 2013

சில்லி கார்லிக் சாஸ் செய்வது எப்படி?/Chilli Garlic Sauce




ஹாய் இன்னைக்கு சில்லி கார்லிக் சாஸ் எப்படி வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றேன்.உங்களுக்கு தேவையான அளவு  செய்து ஃபிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணிக்கலாம். இது செய்றதும் ரொம்ப ஈசி. அதனால தேவையான போது குறைஞ்ச அளவு செஞ்சுக்கலாம். ஃப்ரெஷ்சா யூஸ் பண்ணலாம்.கடைகள்ல வாங்குற சாஸ்ல ஏகப்பட்ட ப்ரிசர்வேடிவ்ஸ் கலந்திருப்பாங்க.முடிஞ்ச அளவு ஈசி செய்ய கூடியதையாவது நாம வீட்டிலேயே தயார் செய்து யூஸ் பண்ணினா ஹெல்த் ரிஸ்க் குறையும் இல்லைங்களா? முடிந்தவரை டின் ஃபுட்,ரெடிமேட் உணவு வகைகளை குறைவா பயன்படுத்துவது உடல் ஆரோகியதிற்கு நல்லது. பின் வரும் பதிவில் வீட்டில் எளிதாக செய்ய கூடிய பொடி வகைகள்,தொக்கு வகைகளை பார்க்கலாம்.