உருட்டி போட்டா
உதிர்த்து போட்டா
ஒரு படத்தில் நடிகர் கருணாஸ் சொல்லுவாரு," டேய் மச்சான் உருட்டி போட்டா போண்டா ,தட்டி போட்டா வடை,இதுதாண்டா வாழ்க்க! அப்படின்னினு. இந்த ரெசிபிக்கு அந்த டைலாக் நல்லா மேட்ச் ஆகும். போண்டா, பக்கோடா ரெண்டுமே ஒரே பேட்டர்ல தான் செய்யணும். ஆனா செய்ற விதம் தான் கொஞ்சம் வித்தியாசப்படும். மாலை வேளையில், மழை தூரலில், பால்கனி மேடையில், ஒரு கையில் சுடசுட தேனீர், மறு கையில் கர கர மொரு மொரு பக்கோடா! வாவ் செம சுட்ச்சுவேசன் இல்லங்க... சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையானவை:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 75 கிராம்
வெள்ளை ரவை - 1 டேபுள்ஸ்பூன்
காலிப்ளவர் - 300 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1" இஞ்ச் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக அரிந்தது)
கொத்தமல்லி தழை - 1/2 கப் (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை - 2 கொத்து (பொடியாக அரிந்தது)
ப்ரியாஸ் பவன் ஆள் இன் ஒன் மசாலா (அ)
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - ருசிக்கேற்ப
கடலை எண்ணெய் - பொறித்து எடுக்க
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,இஞ்சி துருவல்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழை,கருவேப்பிலை, ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து
அதனுடன் சூடாக காய்ச்சிய கடலை எண்ணெய் ஒரு டேபுல்ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து, பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு மாவை கலந்து வைக்கவும்.
- இப்போது சுத்தம் செய்து வைத்த காலிப்ளவர் துண்டுகளை மாவில் நன்றாக தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- தீயை மிதமான (மீடியம்) தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். போண்டாவிற்கு காலிப்ளவர் துண்டுகளை பெரிதாக நறுக்கி பயன்படுத்தவேண்டும்.
- எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் போண்டாவை எண்ணெயில்லாமல் வடிகட்டி எடுத்து பரிமாறவும்.
சுட சுட காலிப்ளவர் போண்டா தயார்.
காலிப்ளவர் பக்கோடா செய்முறை
- போண்டா செய்ய கலந்த மாவில் சிறிதாக நறுக்கிய காலிப்ளவர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போடவும்.
- நன்றாக சிவந்து, எண்ணெய் சலசலப்பு அடங்கும் வரை, கொஞ்சம் பொறுமையாக இருந்து வறுத்து எடுக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்காமல் எடுத்தால் பக்கோடா மொரு மொறுப்பாக இருக்காது.
சுவையான பக்கோடா சுட சுட தயார்...
பின் குறிப்பு :
- போண்டாவிற்கு காலிப்ளவர் துண்டுகளை பெரிதாகவும், பக்கோடாவிற்கு சிறிதாகவும் நறுக்கி வைக்கவும்.
- பக்கோடாவிற்கு மாவு அளவை விட காலிப்ளவர் அதிகமாக தேவைப்படும். ஏனெனில் மாவு முழுதுமாக ஒட்டமால் அங்கங்கே ஒட்டினார் போல் இருக்க வேண்டும்.
இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்..... நன்றி!!!
ஆஹா இந்த வார சனிக்கிழமை செய்து பார்த்து விட வேண்டியதுதான்...
ReplyDeleteபசங்களுக்கு இன்னிக்கு ஈவினிங்க் செஞ்சு குடுத்துட வேண்டியதுதான்
ReplyDelete