Friday, 19 July 2013
Thursday, 18 July 2013
கத்தரிக்காய் க்ரிஸ்பி ஃப்ரை / Baingan Katri
இது ஒரு வடஇந்திய ஸ்நேக்ஸ் ரெசிபி. செய்றது ரொம்ப சுலபம். இத வெறுமனே சாயந்தர நேர ஸ்நேக்ஸாவும் சாப்பிடலாம்.இல்லைனா தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு சைடு டிஸாவும் செய்யலாம்.ஒரு வேலை உங்களுக்கு பெரிய கத்தரிக்காய் கிடைக்கலன்னா நம்ம ஊர் கத்தரிக்காயவே கொஞ்சம் பெருசா பார்த்து வாங்கி,நீளமான துண்டுகளா மீன் போல வெட்டி,இதே முறையில் செய்து பாருங்க!. இத இரண்டு முறையில் செய்யலாம். 1.தவா வில் கொஞ்சமா எண்ணெய் உற்றி சேலோ ப்ரை செய்யலாம். 2. ஓவனில் கிரில் மோடில் வைத்தும் செய்யலாம். மேலும் இதை பார்பிக்யு கிரில்லிலும் செய்யலாம். ஒரு அலுமினியம் பாயிலை பார்பிக்யு கிரில்லின் மேல் வைத்து ,லேசாக எண்ணெய் தடவி , பின் மசாலா தடவிய துண்டுகளை போட்டு அவ்வப்போது இரண்டு பக்கமும் திருப்பி போட்டு லேசாக எண்ணெய் தடவி முறுகலாக வேகவைத்து சாபிட்டால் அருமையாக இருக்கும். சரி எப்படி செய்யணும்னு பாப்போம்..
Tuesday, 16 July 2013
Monday, 15 July 2013
காலிப்ளவர் போண்டா & பக்கோடா / Cauliflower Bonda & Pakoda
உருட்டி போட்டா
உதிர்த்து போட்டா
ஒரு படத்தில் நடிகர் கருணாஸ் சொல்லுவாரு," டேய் மச்சான் உருட்டி போட்டா போண்டா ,தட்டி போட்டா வடை,இதுதாண்டா வாழ்க்க! அப்படின்னினு. இந்த ரெசிபிக்கு அந்த டைலாக் நல்லா மேட்ச் ஆகும். போண்டா, பக்கோடா ரெண்டுமே ஒரே பேட்டர்ல தான் செய்யணும். ஆனா செய்ற விதம் தான் கொஞ்சம் வித்தியாசப்படும். மாலை வேளையில், மழை தூரலில், பால்கனி மேடையில், ஒரு கையில் சுடசுட தேனீர், மறு கையில் கர கர மொரு மொரு பக்கோடா! வாவ் செம சுட்ச்சுவேசன் இல்லங்க... சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
Thursday, 11 July 2013
ஆல் இன் ஒன் மசாலா தூள்/ All In One Masala Powder
இந்த ஆள் இன் ஒன் மசாலா தூளை நீங்க ஆல்மோஸ்ட் எல்லா ரெசிபியிலும் யூஸ் பண்ணிக்கலாம். அதாவது வெஜ் குருமா,சிக்கன் கறி, பொரியல், வறுவல், ஃபிரை,தந்தூரி,சில்லி ஐடம்ஸ்.... எல்லாத்துக்குமே யூஸ் பண்ணலாம்.வேற மசாலா அதாவது தனியா தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,கரம் மசாலா அப்படின்னு தனிதனியா எதுவும் சேர்க்காமல் இத மட்டும் சேர்த்தாலே போதும். சுருக்கமா சொல்லனும்னா ஆள் பர்பஸ் மசாலா.
Tuesday, 9 July 2013
சாப்ட் மைசூர் பாக் / Soft Mysore Pak
மைசூர் பாக் நெனச்ச உடனே செய்யும் இனிப்பு வகை இல்லை. கொஞ்சம் தயக்க பட வைக்கும் ஸ்வீட் தான். ஏன்னா பதம் கொஞ்சம் முன்ன பின்ன போனாலும் எடுத்துக்கிட்ட சிரமம் எல்லாம் வீனா போய்டும். பதத்துக்கு முன்னாலேயே இறக்கிட்டா ஹல்வா போல இருக்கும். கொஞ்சம் அசந்து விட்டுட்டோம்னா கள்ள வச்சு உடைச்சு சாப்பிடுற அளவு பர்பி போல ஆயிடும். சரி இன்னைக்கு இவ்வளவு கஷ்டமான இந்த ஸ்வீட்டை எப்படி ஈசியா செய்யறதுன்னு பார்க்கலாம்.
Thursday, 4 July 2013
டேஸ்டி இட்லி மஞ்சூரியன் / Tasty Idly Manchurian
மீந்து போன இட்லியை என்னடா பன்றதுன்னு முன்னெல்லாம் உப்மா செஞ்சு சாப்பிடுவோம்.ஆனா இப்போ இட்லிய வச்சு செய்யற நிறைய புது புது ஐட்டங்கள் வந்துடுச்சுங்க. மீந்து போச்சேன்னு அத வச்சு வேற எதாவது சமையல் செய்ற காலம் போய்,சில ஸ்பெஷல் ஐட்டம் செய்றதுக்காவே இப்போதெல்லாம் இட்லிய செய்யறாங்க. ஹீ...ஹீ..ஹீ..நானும் அப்படித்தான்.
Wednesday, 3 July 2013
ஆலு கோபி குருமா / Aaloo Gobi Kurma
இது மிக எளிதாக செய்யக்கூடிய குருமா வகை. இதுல ப்ரெஸ்ஷா மசாலாக்களை அரச்சு சேர்க்கரதுனால டேஸ்டும் நல்லா இருக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உருளை கிழங்கும்,காலிப்ளவரும் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிச்ச காய்கறியா தான் இருக்கும்.அதனால அடிக்கடி இதை செய்யலாம். இந்த குருமா ல உங்களுக்கு பிடிச்ச எந்த காய்கறிய வேணாலும் சேர்த்துக்கலாம். கேரட், பீன்ஸ், நூல்கோல் ,பட்டாணி, மீல்மேக்கர்,.....எந்த காம்பினேசன் ல வேணாலும் செய்யலாம்.இல்லனா ஒரே ஒரு காய்கறி மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
Subscribe to:
Posts (Atom)