தக்காளி, புதினா , கொத்தமல்லி இந்த மூன்றையும் சேர்த்து செய்யுற சட்னியை தான் இன்னைக்கு உங்களுடன் ஷேர் பண்றேன் . இது தேங்காய் சேர்க்காமல் செய்யும் ஒரு வகை சட்னி . நீங்க இரண்டு நாட்கள் fridgeஇல் வைத்தும் இதை உபயோகிக்கலாம் .
தேவையான பொருட்கள் :
உப்பின் அளவை சரிபார்க்கவும் . ருசியான தக்காளி புதினா கொத்தமல்லி சட்னி ரெடி .
தேவையான பொருட்கள் :
புதினா - 1 கப்
கொத்தமல்லி இழை - 1 கப்
தக்காளி - 3 சிறியது
பொட்டுகடலை - 2 tbsp
பச்சைமிளகாய் - 2-3
உப்பு - தே .அளவு
ஆயில் - 2 tsp
தாளிக்க :
கடுகு - 1/2 tsp
உ .பருப்பு - 1/2 tsp
கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
- ஒரு வானலியில் 1 tsp எண்ணெய் ஊற்றி அதில் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பொட்டுகடலை சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை வதக்கவும் .
- இதனுடன் நறுக்கிய தக்காளி, தே.அளவு உப்பு சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும் .
- இப்பொழுது புதினா , கொத்தமல்லி இலைகளை சேர்த்து 5நிமிடம் நன்றாக வதக்கவும்.
கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மற்றொரு கடாயில் 1tsp எண்ணெயை ஊற்றி கடுகு ,உ .பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் . இதில் அரைத்த விழுதை சேர்த்து 100ml தண்ணீர் சேர்த்து கரைக்கவும் .
இந்த கலவையை ஒரு கொதி வரும் வரை வெய்யுங்கள் , கலவை சிறிது கெட்டியானதும் , நிறம் மாற ஆரம்பிக்கும் இப்பொழுது இறக்கிவிடுங்கள் .
உப்பின் அளவை சரிபார்க்கவும் . ருசியான தக்காளி புதினா கொத்தமல்லி சட்னி ரெடி .
இதையும் பாருங்க நல்ல காம்பினேசன் ....
ஓட்ஸ் தோசை |
நான் வெங்காயம், தேங்கா சேர்த்தும் பொட்டுக்கடலையை சேர்க்காமயும் செய்வேன்.
ReplyDelete