Thursday, 18 July 2013

கத்தரிக்காய் க்ரிஸ்பி ஃப்ரை / Baingan Katri



இது ஒரு வடஇந்திய ஸ்நேக்ஸ் ரெசிபி. செய்றது ரொம்ப சுலபம். இத வெறுமனே சாயந்தர நேர ஸ்நேக்ஸாவும் சாப்பிடலாம்.இல்லைனா தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு சைடு டிஸாவும் செய்யலாம்.ஒரு வேலை உங்களுக்கு பெரிய கத்தரிக்காய் கிடைக்கலன்னா நம்ம ஊர் கத்தரிக்காயவே கொஞ்சம் பெருசா பார்த்து வாங்கி,நீளமான துண்டுகளா மீன் போல வெட்டி,இதே முறையில் செய்து பாருங்க!. இத இரண்டு முறையில் செய்யலாம். 1.தவா வில் கொஞ்சமா எண்ணெய் உற்றி சேலோ ப்ரை செய்யலாம். 2. ஓவனில் கிரில் மோடில் வைத்தும் செய்யலாம். மேலும் இதை  பார்பிக்யு கிரில்லிலும் செய்யலாம். ஒரு அலுமினியம் பாயிலை பார்பிக்யு கிரில்லின் மேல் வைத்து ,லேசாக எண்ணெய் தடவி , பின் மசாலா தடவிய துண்டுகளை போட்டு அவ்வப்போது இரண்டு பக்கமும் திருப்பி போட்டு லேசாக எண்ணெய் தடவி முறுகலாக வேகவைத்து சாபிட்டால் அருமையாக இருக்கும். சரி எப்படி செய்யணும்னு பாப்போம்..

தேவையானவை 
பெரிய கத்தரிக்காய் - 1 
கடலை எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
அரிசி மாவு  - 2  டேபுள்ஸ்பூன் 
மசாலாவிற்கு தேவையானவை 
தயிர் - 1-2 தேக்கரண்டி
இஞ்சி துருவல் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் -¼ தேக்கரண்டி
மிளகுத்தூள் -  ¼ தேக்கரண்டி
உப்பு - ½ தேக்கரண்டி
ஆள் இன் ஒன் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (வீட்டில் இருந்தால்)
                      அல்லது 
தனியாத்தூள் - ½ தேக்கரண்டி
சாட் மசாலா -  ½ தேக்கரண்டி
(நான் ஆல் இன் ஒன் மசாலா பயன்படுத்தி இருக்கிறேன் )

அலங்கரிக்க 
பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி (பொடியாக அறிந்தது)
எலுமிச்சை - பாதி 

செய்முறை 



  • முதலில் மசாலாவிற்கு தேவையானவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.





  •  பின் கத்தரிக்காய் வட்டமாகவோ நீலமாகவோ 1/2 இஞ்ச் துண்டுகளாக  வெட்டி இரண்டு பக்கமும் லேசாக கீறிவிடவும்.





  • இரண்டு பக்கமும் கலந்து வைத்த மசாலாவை தடவி வைக்கவும்.




  • பின் அரசிமாவில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் ரெடியாக வைக்கவும்.





  • ஒரு கடாய் , அல்லது தோசைக்கல்லில் சிறுது எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் கத்தரிக்காயை போட்டு,  மொரு மொறுப்பாகவும், பொன்னிறமாகவும் மாறும் வரை  வறுத்து எடுக்கவும்.




  • அவனில் செய்வதாக இருந்தால் முதலில் கத்தரிக்காயை தவாவில் போட்டு இரண்டு பக்கமும் மசாலா நன்றாக ஒட்டிக்கொண்ட பிறகு, அதை ஒரு தட்டில் பரப்பி வைத்து, அவனில் க்ரிச்பாக வேகும் வரை விட்டு பின் எடுத்து பரிமாறவும்... முதலிலேயே அவனை 400 டிகிரி முற்சூடு செய்யவும்.
  • இந்த தட்டை ஒவனில் வைத்து 20 நிமிடங்கள் வைக்கவும்.கத்தரிக்காயை  10 நிமிடம் ஒரு பக்கமும், பின்னர் 10 நிமிடம் மற்றொரு பக்கமும் திருப்பி விடவும். நல்ல கிரிஸ்பியான கத்தரிக்காய் ரெடி.









இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் .... 

இதையும் பாருங்க...
சேலம் ஸ்பெசல் - தட்டு வடை செட் 

 

7 comments:

  1. வாவ்... சூப்பர்...! செய்திடுவோம்...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பார்த்துட்டு சொல்லுங்கள் சகோ....

      Delete
  2. எங்க வீட்டில் மைக்ரோ வேவ் அவன் இல்ல. அதனால வாங்கி குடுத்துட்டு அப்புறம் பதிவு போடவும் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்கயா!....அதுக்கு தானே தோசைக்கல்லில் செய்யும் முறையையும் போட்டு இருக்கேன்...சரி விடுங்க, அக்காவுக்கு ஒரு அவன் பார்சல்..

      Delete
  3. அக்காவுக்கு ஒரு அவன் பார்சல்..
    >>
    ஏற்கனவே என்னவனோடு பாடு பட்டு கிட்டிருக்கேன். இன்னொரு ”அவனா”?!

    ReplyDelete
    Replies
    1. அடடா ரொம்ப பீல் பண்ணுரிங்கலே.....அப்போ அந்த அவன் கேன்சல்....

      Delete
  4. க்ரிஸ்பியா நல்லா இருக்கும் போலிருக்கே செய்து பார்க்க வேண்டியதுதான்

    ReplyDelete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....