தேவையானபொருட்கள்:
- வறுத்த வேர்க்கடலை -1கப்
- தேங்காய்துருவல் -1/2கப்
- பொட்டுகடலை- 1/4கப்
- பச்சை மிளகாய் -2
- சீரகம்-1டீஸ்பூன்
- பூண்டு - 4 பற்கள்
- உப்பு - தேவையான அளவு
- புளி - கோலிகுண்டளவு
தாளிப்பதற்கு :
- கடுகு -1/2 டீஸ்பூன்
- சீரகம் -1/4 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1/2டீஸ்பூன்
- கடலைப்பருப்பு-1/2 டீஸ்பூன்
- எண்ணெய்- 1 டேஸ்பூன்
- கறிவேப்பிலை- 1கொத்து
- செய்முறை:
- வேர்கடலையை வறுத்து தோல் உரித்து வைக்கவும். சிறுது எண்ணையில் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் வறுத்து வைக்கவும்.
- மிக்சி ஜாரில் தேங்காய் துருவல் , பொட்டுகடலை, வறுத்த வேர்கடலை,வறுத்த பூண்டு,மிளகாய்,ஜீரகம், புளி மற்றும் உப்பு ஆகியவற்றுடன் தேவையன அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- தாளிக்க தேவையான பொருட்களை எண்ணையில் தாளித்து சேர்க்கவும்.
- சுவையான வேர்கடலை சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையான காம்பினேசன்.
கொத்தமல்லி சட்னி |
ரெசிபி காண இங்கே கிளிக்கவும்.
பொரி கடலை கிடைக்கலன்னா வேர்க்கடலை சட்னி செய்றது வழககம்தானே... நல்லா சொல்லிருக்கீங்க. ஆனா, உங்ககிட்ட இன்னும் டிஃபரண்ட்டான ரெசிபியைத் தான் எதிர்பார்க்கறேன்!
ReplyDelete