Tuesday 9 July 2013

சாப்ட் மைசூர் பாக் / Soft Mysore Pak


மைசூர் பாக் நெனச்ச உடனே செய்யும் இனிப்பு வகை இல்லை. கொஞ்சம் தயக்க பட வைக்கும் ஸ்வீட் தான். ஏன்னா பதம் கொஞ்சம் முன்ன பின்ன போனாலும் எடுத்துக்கிட்ட சிரமம் எல்லாம் வீனா போய்டும். பதத்துக்கு முன்னாலேயே இறக்கிட்டா ஹல்வா போல இருக்கும். கொஞ்சம் அசந்து விட்டுட்டோம்னா கள்ள வச்சு உடைச்சு சாப்பிடுற அளவு பர்பி போல ஆயிடும்.   சரி இன்னைக்கு இவ்வளவு கஷ்டமான இந்த ஸ்வீட்டை எப்படி ஈசியா செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1  கப்
நெய் – 1 1 /4 கப்
எண்ணெய்(sunflower oil) – 3 /4 கப்
சர்க்கரை – 2 கப்
பால் - 1/4 கப் 
தண்ணீர் – 1 /4 கப்
சமையல் சோடா - 1சிட்டிகை 

செய்முறை
  • மாவை கட்டி இல்லாமல் நன்கு சலித்துக் கொள்ளவும்.
  • கடைசியாக மைசூர் பாகை கொட்டும் தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை நன்கு சூடு செய்து கொள்ளவும்(எண்ணெய் மைசூர் பாக் மிருதுவாக இருப்பதற்கு உதவும்)
  • முதலில் ஒரு அடிகனமான கடாயை சூடு படுத்தி, அதில் ஒரு கப் கடலை மாவை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

  • மாவை  பச்சை வாசனை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுக்கவும்.
  • பிறகு அடுப்பை அனைத்து விட்டு அதில் சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.

  • ஒரு அடி கனமான அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால்  ஆகியவற்றை கலந்து சூடு செய்யவும்.சர்க்கரை நன்கு கரைந்ததும் வடிகட்டியைப் பயன்படுத்தி தூசி இல்லாமல் நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஒரு கம்பி பாகு பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கவும்.
  • பிறகு அதில் நெய் மற்றும், எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றி நன்றாக கலக்கவும்.

  • கடலை மாவு முழுவதும் பாகில் கலந்தவுடன், சுட வைத்துள்ள நெய் – எண்ணெய் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.


  • நெய்- எண்ணெய் கலவையை முழுவதுமாக நன்கு கலக்கும் வரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
  • மாவு பதம் கெட்டியானதும், நெய் பாத்திரத்தின் ஓரங்களில் வடிந்து  பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது சமையல் சோடா தூவி ஒரு கிளறு கிளறி விட்டு, உடனடியாக அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி,

  •  தயாராக வைத்துள்ள நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பவும்.

  • சிறிது மாவை எடுத்து விரலில் அழுத்தி பிடித்தால் விரலில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம். 

  • மாவை சமமாக பரப்பி சிறிது நேரம் ஆறவிடவும்.


  • 3 -4  நிமிடங்கள் கழித்து உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். சூடு ஆறிய பின்பு மைசூர் பாகை எடுத்து வேண்டிய பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.


சுவையான சாப்ட் மைசூர் பாக் தயார்.


இந்த நாள் இனிய(இனிப்பான) நாளாக வாழ்த்துக்கள் .....

சிறந்த கருத்து எழுதுபவர்களுக்கு மைசூர் பாக் பார்சல் அனுப்பப்படும்.

குறிப்பு
அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து பயன்படுத்துவது நல்லது.

8 comments:

  1. சிறந்த கருத்து .... ஒரு கிலோ மைசூர் பாக் பார்சல்ல்ல்ல் ....

    ReplyDelete
    Replies
    1. ஒரு கிலோ மைசூர் பாக்கா, நான் அளவு ஏதும் சொல்லலையே! மேலே மைசூர் பாக் கட் பண்ணின படம் இருக்கு பாருங்க அதுல ஒரு பீஸ் மிஸ் ஆகி இருக்கும். அத தான் பார்சல் அனுப்பி இருக்கேன். வருகைக்கு நன்றி சகோதரரே!

      Delete
  2. வாவ்... சூப்பர்.. இன்றே உடனே செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி..

      Delete
  3. கப் கப்னு சொல்லிறீங்களே .......அதை கொஞ்சம் கிராம் கணக்கில் சொன்ன நல்ல இருக்குமே......பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. நான் செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக இருந்தது... குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  5. முயற்சி செய்து பார்த்தேன்.. மிகவும் சூப்பராக மென்மையாக வந்தது... குறிப்புக்கு நன்றி...

    ReplyDelete
  6. இந்த தீபாவளிக்கு முயற்சி செய்கிறோம் வீட்ல

    ReplyDelete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....