Thursday 11 July 2013

ஆல் இன் ஒன் மசாலா தூள்/ All In One Masala Powder


இந்த ஆள் இன் ஒன் மசாலா தூளை நீங்க ஆல்மோஸ்ட் எல்லா ரெசிபியிலும் யூஸ் பண்ணிக்கலாம். அதாவது வெஜ் குருமா,சிக்கன் கறி, பொரியல், வறுவல், ஃபிரை,தந்தூரி,சில்லி ஐடம்ஸ்.... எல்லாத்துக்குமே யூஸ் பண்ணலாம்.வேற மசாலா அதாவது தனியா தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,கரம் மசாலா அப்படின்னு தனிதனியா எதுவும் சேர்க்காமல் இத மட்டும் சேர்த்தாலே போதும். சுருக்கமா சொல்லனும்னா ஆள் பர்பஸ் மசாலா.


தேவையானவை

கொத்தமல்லி விதை - 1கப்
சீரகம் - 1/2 கப்
சோம்பு - 1/2 கப்
மிளகாய் - 7
பிரியாணி இலை - 2 சிறியது
மிளகு - 1+1/2  டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை -1இன்ச் பீஸ் - 3
கிராம்பு - 15
அன்னாசி பூ - 1
ஜாதிபத்ரி - 1 பூ
ஏலக்காய்- 4
கருவேப்பிலை - 1/4 கப்  (சுத்தம் செய்து உலர்த்தி வைக்கவும்)
வெங்காயத்தூள் - 1 டேபுள்ஸ்பூன்
பூண்டு தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சித்தூள் (சுக்கு) - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை


  •  ஈரமில்லாத சுத்தமான ஒரு கடாயில வெங்காயத்தூள், பூண்டுத்தூள், இஞ்சித்தூள்,மஞ்சள் தூள் தவிர்த்து மற்ற பொருட்களை கருகி விடாமல், மிதமான தீயில் வைத்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து நன்றாக ஆரிய பின் உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
  • பொடியை ஒரு அகன்ற தட்டத்தில் பரப்பி 1/2 மணி நேரம் ஆறவிட்டு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
  • தேவையான அளவு சிறிய டப்பாவில் எடுத்து வைத்துகொண்டு மீதியை ஈரம் படாதவாறு நன்றாக மூடி பிரிட்ஜில் வைத்து 5 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.
  • பூண்டு தூள் ,வெங்காயத்தூள் கிடைக்காதவர்கள், 10 மீடியம் சைஸ் பூண்டு பற்கள்  மற்றும் 10 சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்), வட்ட வட்டமாக லேசாக  நறுக்கி எண்ணையில்,மிதமான தீயில் மொரு மொறுப்பாக சிவக்க வறுத்து ஆறியபின் அதை மசாலா அரைக்கும் போது சேர்த்து அரைத்துகொள்ளலாம்.கருகாமல் வறுத்து எடுக்கவும்.இல்லையென்றால்  மசாலா கசப்பாக இருக்கும். 
  • கருவேப்பிலை மற்றும் கசகசாவை கடைசியாக சேர்த்து வறுக்கவும்.



5 comments:

  1. சமையல் வேலையை கொஞ்சம் சுலபமாக்கிட்டீங்க. இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க . கண்ணை கட்டுது.

    ReplyDelete
    Replies
    1. அடடா அதை நான் கவனிக்கவே இல்லையே சிரமத்திற்கு வருந்துகிறேன்.கருத்திற்க்கு நன்றி சகோதரி..

      Delete
  2. நல்ல தகவல். நானும் செய்து வைக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்க்கு நன்றி சகோதரி..

      Delete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....