Tuesday 16 July 2013

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?



மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது  ரீஃபைண்ட் ஆயில்.




யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோகியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.

அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?
ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன் படுத்தலாம். இதை தானே நம்ம தாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா  : அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லு வாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லு வாங்களே!

நான் : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட் வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா  : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க..

ஆரோகியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோக படுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு, உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!!  ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம்.
அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

 நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!. அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன் வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாபிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.

மேலும் அவர்கள் எதை தயாரிகிறார்களோ, அதை ஆஹா ஓஹோ என்று தான் விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள் ரீபைண்ட் ஆயில், பயன் படுத்தினால் கேன்சர் வராது என்று சொல்லி தான் விற்பார்கள். அனால் அது உண்மையா  பொய்யா என்று நாம் யோசித்து வாங்க வேண்டும்.

நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன் படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று! அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசை  படுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோக படுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.

இனிமேலும் நாம் ஏமாறினால் அது நம் வருங்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும். எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம். ஏனெனில் வரும் காலம் இன்று நாம் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என்று நம் குழந்தைகளுக்கு மெல்ல சாகும் விசத்தை கொடுக்காதீர்கள்!!!!

                                                                        சில குறிப்புகள் :" ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

12 comments:

  1. very useful..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..

      Delete
  2. padhivittamaikku nandri
    surendran

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..

      Delete
  3. நல்லதொரு தகவல். நாங்க கடலை எண்ணேய் யூஸ் பண்ணுவோம். ஆனா, அதும் சுத்தம் பண்ணதுதான். இனி கவனமா இருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி..

      Delete
  4. உங்களின் தளத்திற்கு முதல் வருகை... தொடர்கிறேன்...

    மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..சகோதரரே..

      Delete
  5. பயனுள்ள பதிவு..... நன்றி

    ReplyDelete
  6. big hats off to ur site as a seller

    ReplyDelete
  7. kadalai ennai nallaennai thengai ennai thavira tharpothu uppayogathil ulla annathu ennaikalum refind oil thana enphathai theria paduthavum message by moorthy

    ReplyDelete
  8. அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய அறிய தகவல்

    நன்றி

    ReplyDelete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....