Friday 24 May 2013

பாதாம் அல்வா/ BADAM HALWA

வணக்கம்!!!
வருகைக்கு நன்றி....
இது என்னோட முதல் பதிவு. இனிப்பு செய்து ஆரம்பிக்கலாம்னு நினைத்தேன். அதனால பாதாம் அல்வாவோட ஆரம்பிக்கிறேன். சரி வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
====================

பாதாம்---- 100கிராம்
சர்க்கரை---- 70கிராம்
காய்ச்சிய பால்---- 400மில்லி
நெய்---- 50 கிராம்
பச்சை கற்பூரம்----1சிட்டிகை
ஏலக்காய்பொடி----1/2 டீஸ்பூன்
பாதாம் பால் பவுடர்----1டீஸ்பூன் (விருப்பமிருந்தால்).
குங்குமப்பூ (அ)
மஞ்சள் நிறம் பூட் கலர்----2சிட்டிகை



செய்முறை :
=========

  1. முதலில் பாதாமை 3 அல்லது 4 மணிநேரம் ஊரவைக்கவும். பின் அதன் தோலை உரித்து உலர்த்தவும்.
  2. நன்றாக காய்ந்தபிறகு மிக்சியில் தூளாக அரைக்கவும். மிக்சி ஜார் சூடாகாமல் விட்டு விட்டு பல்ஸ் மோடில் அரைக்கவும்.
  3. இப்போது அடி கனமான (அல்) நான் ஸ்டிக் கடாவில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பொடி செய்த பாதாமை கொட்டி 1நிமிடம் வறுக்கவும்.(சிவக்க கூடாது). சிம்மில் வைத்து வறுக்கவும்.

  4. பின் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறவும்.கை விடாமல் அடி பிடிக்காமல் கிளறுவது அவசியம்.
  5. பால் வற்றியதும் பாதம் கலவை கெட்டியாகி இருக்கும்.இப்போது சர்க்கரை சேர்க்கவும் (பாதம் பால் பவுடர் சேர்ப்பதாக இருந்தால் இந்த நேரத்தில்  சேர்க்கவும் ).
  6. சர்க்கரை சேர்த்ததும் கலவை தளர்ந்துவிடும். மீண்டும் நன்றாக கிளறவும்.
  7. குங்குமப்பூ சேர்ப்பதாக இருந்தால் அதை 1டேபுள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் ஊறவைத்து மஞ்சள் நிறமாக  மாறியதும் சர்க்கரை சேர்க்கும் போது இதையும் சேர்க்கவும்.(அல்லது) மஞ்சள் பூட் கலர் சேர்ப்பதாக இருந்தால்1டே .ஸ்பூன் தண்ணீரில் கலக்கி சர்க்கரை சேர்க்கும் போது சேர்க்கவும்.
  8. அல்வா சிறுது கெட்டியாக ஆரம்பிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய்யையும் சேர்த்து கிளறவும். ஏலக்காய் பொடி ,பச்சை கற்பூரம் ஆகியவற்றை உடன் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  9. அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக உருண்டு வரும் பதத்தில் தீயை அனைத்து விட்டு நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவை கொட்டி ஆறவிடவும்.
  10. அல்வா ஆறியதும் சுத்தமான பாத்திரத்தில் மாற்றி பிரிட்ஜில் 3-4 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.                                                        
  11. அல்லது சிறுது சிறுதாக பட்டர் பேப்ப்பரில் பேக் செய்து விருந்தினருக்கு பரிமாறலாம்.வீட்டினரும்,விருந்தினரும் பாராட்டு மழை பொழிவார்கள்.

குறிப்பு :
======
  1. பாதாமை நைசாக பொடி செய்யவும்.
  2. பாதம் பால் பவுடர் சேர்ப்பதாக இருந்தால் ஏலக்காய் பச்சை கற்பூரம் தேவை இல்லை.
  3. நான் ஆச்சி பாதம் பால் பவுடர் சேர்த்து செய்வது வழக்கம்.
  4. நெய்யின் அளவை குறைத்தால் சுவை மாறுபடும்.
  5. பாதமை பவுடர் செய்து ஏர்ட்டயிட் கண்டைனரில் வைத்து கொண்டால் நினைத்த நேரத்தில் 20 நிமிடத்தில் அல்வா செய்துவிடலாம். 
  6. அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்,இல்லையெனில் மொத்த அல்வாவும் கெட்டுவிடும். 

3 comments:

  1. படமே நாவில் நீர் ஊறச் செய்யும் விதமா இருக்குது. ம்ம்ம்... செய்யச் சொல்லி டேஸ்ட் பாத்துடறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....